Breaking
Fri. May 3rd, 2024

மாவடிப்பள்ளியில் அமைந்துள்ள ஒரேயொரு பாடசாலை கமு/அல் – அஷ்ரப் மகா வித்தியாலயம் ஆகும். இப்பாடசாலை மாணவர்கள் அகில இலங்கை ரீதியிலும், மாகாண மட்ட ரீதியிலும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று ஊருக்கும், பாடசாலைக்கும் பெறுமைபெற்றுத்தந்துள்ளனர்.
அத்தோடு அண்மையில் நடைபெற்ற சதுரங்க போட்டியிலும் வெற்றி பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இருந்த போதிலும் இவ் ஆண்டுக்கான கல்வி செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு மாணவர்கள் கற்றல் நடவடிக்கையில் ஈடுபட தளபாட வசதிகள் போதாமையினாலும், தற்போது கையிருப்பிலுள்ள தளபாடங்கள் பாதிப்புக்குள்ளாகி நேர்த்தியான முறையில் இல்லாமையினால் மாணவர்கள் பல அசௌகரியங்களை எதிர் கொள்வதாக பாடசாலையின் அதிபர் கௌரவ அனீஸ் அவர்கள் எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மாவடிப்பள்ளி மத்திய குழுவிடமும், காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஜலீல் அவர்களிடமும் இக் குறைபாட்டைக் கூறி இதற்கான உதவிகளை வழங்குமாறும் வேண்டினார்.

அவ் வேண்டுகோளுக்கமைய எமது மத்தியகுழு, பிரதேச சபை உறுப்பினரின் முயற்சியின் பயனாக எமது கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான அல்ஹாஜ் ரிஷாட் பதியுதீன் அவர்களின் வழிகாட்டலின் கீழ் நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் கௌரவ தாஹிர் அவர்களின் நிதியொதிக்கீட்டின் மூலம் பாடசாலைக்கான தளபாடங்கள் இன்று அதிபர், ஆசிரியர், பெற்றோர்களிடம் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் அ.இ.ம.காங்கிரஸின் மத்திய குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் எம். ஜலீல், பாடசாலை அதிபர் ஆசிரியர்கள், பெறறோர்கள் கலந்து சிறப்பித்தனர்.

Related Post