“மீரா விளையாட்டுக் கழக” அங்குரார்ப்பண நிகழ்வும், சீருடை அறிமுகமும்!

கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட, மீராவோடை பகுதியில் இயங்கி வரும் ‘மீரா விளையாட்டுக் கழக’ அங்குரார்ப்பண நிகழ்வும், கழக சீருடை அறிமுகமும், மீராவோடை அந்நூர் கேட்போர் கூடத்தில் (9) இடம்பெற்றது.

கழகத் தலைவர் ஐ.எம்.றிஸ்வின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், மக்கள் காங்கிரஸ் தவிசாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளருமான அமீர் அலி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, கழக சீருடை, கழக சின்னம் ஆகியவற்றை அறிமுகம் செய்து வைத்து உரையாற்றினார்.

அத்துடன், இந்த நிகழ்வின் போது, முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலியும் கௌரவிக்கப்பட்டதுடன், கழக ஆலோசகர்களும் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வில், ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் அஸ்மி, பிரதேச சபை உறுப்பினர்களான நௌபர், ஜௌபர் மற்றும் முன்னாள் தவிசாளர் ஹமீட், சட்டத்தரணி முஹம்மட் ராசிக் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.