Breaking
Sat. Dec 6th, 2025

மட்டக்களப்பு மாவட்டம், கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி (அமிஸ்டீன்) தனது தவிசாளர் பதவியை நேற்று முன்தினம் 20ஆம் திகதி இராஜினாமாச் செய்துள்ளார்.

கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிட்டு வெற்றிபெற்ற இவர், இரண்டு வருடங்களின் பின்னர், அதே கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஏ.எம்.நெளபருக்கு தவிசாளர் பதவியை வழங்குவதாக, ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய, தவிசாளர் பதவியை ஐ.ரீ.அஸ்மி இராஜினாமாச்  செய்துள்ளதோடு, உத்தியோகபூர்வமாக ஏ.எம்.நெளபர் தெரிவு செய்யப்படும் வரை, பிரதித் தவிசாளராக பதவிபுரிந்த யூ.எல்.அஹமட் லெவ்வை இடைக்கால தவிசாளராக  நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Post