Breaking
Sat. Dec 6th, 2025

பாராளு மன்றம் நேற்று பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தலைமையில் கூடியது.

ஆளும் கட்சியிலிருந்து வெளியேறிய ஜாதிக ஹெல உறுமய உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிர்க்கட்சி ஆசன வரிசையில் ஆசனங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.

அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு ஆளும் தரப்பில் முன்வரிசையில் ஆசனம் ஒதுக்கப்பட்டிருந்தது.

ஆளும் கட்சியிலிருந்து எதிர்க்கட்சிக்குச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் மாத்திரமே நேற்று சபைக்கு வந்திருந்தனர்.

இந்த ஆசன ஒதுக்கீடுகளுக்கு அமைய ஆளும் கட்சி உறுப்பினர்கள் பலரின் ஆசனங்கள் மாறியிருந்தமையை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

அதேநேரம் புதிதாக நேற்று பதவியேற்றுக்கொண்ட அமீர் அலிக்கு ஆளும் கட்சியின் பின் வரிசையில் ஆசனம் ஒதுக்கப்பட்டிருந்தது

Related Post