பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேனவை ஆதரித்து ஐக்கிய தேசியக் கட்சியின் இளைஞர் முன்னணியினால் பரப்புரைக் கூட்டம் ஒன்று இன்று மாலை பொலன்னறுவையில் இடம்பெறவுள்ளது.
மாவட்ட மட்டத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள கூட்டத்தொடரின் முதலாவது பரப்புரையே இன்று நடைபெறவுள்ளதாக ஐக்கிய இளைஞர் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

