ஆளும் மற்றும் எதிரணி தரப்பினரின் கட்சி தாவல்கள் இம்மாத இறுதி வாரம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் முடிவுகள் குறித்து உறுதியற்ற தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை அரசில் உள்ள அரைவாசியினர் தமது பக்கம் வருவர் அப்படி வரமுடியாதவர்கள் அங்கு இருந்துகொண்டே தமக்கு ஆதரவளிக்கவுள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், ஐக்கிய தேசிய கட்சியின் 20 தொகுதி அமைப்பாளர்கள் அரசுடன் இணைந்துக்கொள்வர் என்று திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

