புரட்சித் தலைவா வாழ்க வாழ்க பல்லாண்டு!

புரட்சித் தலைவா
வாழ்க வாழ்க பல்லாண்டு!
 
அகவை
ஐம்பதை
நெருங்கும்
அதிசயத் தலைவா
மக்கள்
உனது
நிரந்தர உறவா ……….
 
சத்தியம்
உனது
சாகா வரமா
நேர்மை
நமது
கட்சிக்கு உரமா …….
 
சிறையும்
வதையும்
சரித்திரமன்றோ
நாளை
உனது
வெற்றிக்கு நன்றோ…….
 
திங்கள் போலே
உலா
வருகிறாய்
நன்றி சொல்ல
ஓடி
வருகிறாய் …………..
 
துயரம்
கண்டு
துடித்து நிற்கிறாய்
உள்ளம் எங்கும்
நிறைந்து
விடுகிறாய் ………
 
உறவுக்காக
ஓடி
வருகிறாய்
அன்பில்
கலந்து
உறவு கொள்கிறாய் ……
 
துரோகிகள்
என்றால்
விலகி வருகிறாய்
தோழமை
என்றால்
தூக்கி விடுகிறாய் ……
 
தூயவர் வாழ்த்து
துணை வரும்
தலைவா ……
 
துயர் வரும் போது
துணைவரும்
அறிவாய் ………….
 
வாழ்க வாழ்க
பல்லாண்டு …..
 
கிழக்கு வானம்
27.11.2021