Breaking
Sat. Dec 6th, 2025

வாழைச்சேனை நிருபர்

வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் மீள் குடியேற்ற கிராமமான காரமுனை முஹைதீன் பள்ளிவாசலின் இமாமுக்கான மாதாந்த கொடுப்பனவு இன்று ஜுனைட் நளீமியினால் வழங்கி வைக்கப்பட்டது.

அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் வசித்து வரும் இக் கிராம மக்கள் தங்களது பள்ளிவாயல் இமாமுக்கான கொடுப்பணவு வழங்குவதில் பல் வேறு சிறமங்களை எதிர்நோக்கி வந்தனர்.

இது தொடர்பாக ஜுனைட் நளீமியின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து கடந்த ஐந்து மாதங்களுக்கான கொடுப்பணவை பள்ளிவாயல் நிருவாகத்தினரிடம் ஜுனைட் நளீமி வழங்கி வைத்ததுடன் தொடர்ந்தும் மாதந்த கொடுப்பனவு வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதாகவும் பள்ளிவாயல் நிருவாகத்தினரிடம் உறுதியளித்துள்ளார்.

குறித்த பள்ளிவாயல் முஅத்தினுக்கான மாதாந்தக் கொடுப்பணவும் பள்ளிவாயல் பராமரிப்புச் செலவும் தேவைப்படுவதாகவும் உதவிகள் செய்ய நினைக்கும் தனவந்தர்கள் பள்ளிவாயல் நிருவாகத்தினை தொடர்பு கொள்ள முடியும் என்றும் ஜுனைட் நளீமி தெரிவித்தார்.

Related Post