கௌரவமான பெண்களது ஆடைகளைக் களைந்து அவர்களை நிலத்தில் போட்டு மிதிக்க வேண்டும் என்றளவிலான கதைகளைக் கூறும் அளவுக்கு எமது உயர் கல்வி அமைச்சின் தரம் மாறியுள்ளதென பாராளுமன்ற உறுப்பினர் ரோசி சேனாநாயக்க விசனம் தெரிவித்தார்.
கண்டி, ஸ்ரீ புஷ்பதான மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். ஆக்கூட்டத்தில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
இன்று உயர் கல்வி அமைச்சிற்குப் பாரி பல பொறுப்புக்கள் உண்டு. நாட்டின் இளைஞர், யுவதிகளது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு திட்டமிட வேண்டிய பல்வேறு தேவைகள் இருக்கின்றன. ஆனால் அவற்றையெல்லாம் மறந்து தமது வடிகான் வாயினால் ஏதேதோ உளறித்தள்ளுகின்றார்.
இந்நாட்டில் கௌரவமான தலைவர்கள் இருவரது புதல்வி, நாட்டின் தலைவராக இருந்தவர் பற்றி அகௌரவமாகப் பேசும் நிலையில் எமது உயர்கல்வி அமைச்சு காணப்படுகின்றது. ஒரு பெண்ணின் ஆடையைக் களைதல் என்பது எவ்வளவு பாராதூரமான குற்றச்செயல். அதனை நாவால் கூறுவதும் ஒருவகை வன்முறையாகும். இப்படியானவர்கள் எவ்வாறு இளைஞர், யுவதிகளுக்காக கல்வியைத் திட்டமிட முடியும்.
இன்று புலம்பெயர்ந்த மக்கள் பற்றி தொடர்ந்து பேசப்படுகிறது. அரசின் மடியில் தவழ்ந்து விளையாடும் குமரன் பத்மநாதன் ஜனாதிபதி ஆலோசகர் சிவநேசத்துரை சந்திரகாந்தன், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உபதலைவரும் பிரதி அமைச்சருமான முரளிதரன் இவர்கள் யார். இவர்களின் வாரிசுகள்தானே புலம் பெயர்ந்தவர்களாக உள்ளனர்.

