ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினைச் சேர்ந்த உள்ளூராட்சி உறுப்பினர்கள், கட்சி பிரதேச அமைப்பாளர் உள்ளிட்ட 20 பேர் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் வடமத்திய மாகாணசபை ஆளுங்கட்சி உறுப்பினர் பி.பி.திஸாநாயக்க, அனுராதபுரம் பிரதேச சபையின் 12 உறுப்பினர்களுமாக 13 பேர், திம்பிரிகஸ்யாயவில் உள்ள பொது வேட்பாளர் அலுவலகத்திற்கு சென்று எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளனர்.
அத்துடன் அநுராதபுரம் மாவட்ட ஜயஅபிமானி அமைப்பின் தலைவர் ஆர்.பி.ஞானதிலக மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அநுராதபுரம் மாவட்ட செயலாளர் சந்திரசிறி திஸாநாயக்க ஆகியோர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு அளிக்க தீர்மானித்துள்ளனர்.
இதேவேளை சீதாவக்கை பிரதேச சபை உபதலைவர் அனந்த ரூபசிங்க உள்ளிட்ட ஆளும் தரப்பு உறுப்பினர்கள் 5 பேர் இன்று பொது எதிரணி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஆளும் கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து பொது எதிரணி வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்குவதால் தென்னிலங்கையில் மைத்திரியின் செல்வாக்கு அதிகரித்துச் செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

