Breaking
Fri. Dec 5th, 2025

அல்லாஹ்வின் இல்லம் மீது எவர் கைவைத்தாலும் அல்லாஹ் அவர்களுக்கான தண்டனையினை வழங்குவான் என தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான றிசாத் பதியுதீன், எமது சமூகத்தின் பாதுகாப்புக்காக எதனையும் இழக்க தயாராகவுள்ளேன் என்றும்  கூறினார்.

பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஏன் எமது கட்சி ஆதரித்தது என்பது தொடர்பில் அநுராதபுரம் சீ.டி.சீ மண்டபத்தில் நேற்று (03) இடம் பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

உலமாக்கள், புத்தி ஜீவிகள், துறைசார்ந்தவர்கள் உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் மேலும் றிசாத் பதியுதீன் உரைாயற்றுகையில்,

இந்த நாட்டில் எமது சமூகம் தலை நிமிர்ந்தம் கௌரவத்துடன் வாழ வேண்டும். எமது மதக் கடமைகளை சுதந்திரமாக செய்ய வேண்டும். ஆனால் துரதிஷ்டம் இன்று அந்த நிலை மாறிவிட்டது. அச்சத்துடனேயே எமது பணிகளை செய்ய வேண்டியுள்ளது.

இந்த நிலையில் இருந்து நாம் விடுபட எமது முஸ்லிம்களின் ஒரேயொரு பிரதானமான ஆயுதமாக இருப்பது துஆ மட்டுமே. அதனைக் கொண்டு நாம் அல்லாஹ்விடம் உதவி தேடுவோம் என்றும் றிசாத் பதியுதீன் கூறினார்.

Related Post