Breaking
Fri. Dec 5th, 2025

கண்டி குருநாகல் வீதியில் மல்லவப்பிட்டியப் பகுதியில் முஸ்லிம் நபருடைய வீட்டை பலவந்தமாக பிடித்துக் கொண்டிருந்த இடத்தில் குருநாகல் மாவட்ட பொது பல சேன அமைப்பின் அலுவலகம் எனப் பெயரிடப்பட்டிருந்த விளம்பரப் பலகை இன்றிலிருந்து அகற்றப்பட்டுள்ளது.

இந்த வீடு கொழும்பு உயர் நீதி மன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு பிஸ்கால் மூலம் வெளியேற்ற முயற்சிகள் மேற்கொண்ட போது பலவந்தமாக திடீரென அவ்விடத்தில் பொது பலசேன அமைப்பின் மாவட்டக் காரியலம் கடந்த ஒரு வருடத்திற்கு காலத்துக்கும் மேலாக செயற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post