Breaking
Fri. Dec 5th, 2025

முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத் மற்றும் கிழக்கு மாகாண அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் ஆகியோரே ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப் பதிவில் ஈடுப்படாது தவிர்த்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் அமைச்சர் பஷீர் சேகு தாவூதின் வாக்கு ஏறாவூர் அல் – அஸ்ஹர் மகளிர் உயர்தர பாடசாலையிலும் அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமடின் வாக்கு ஏறாவூர் அறபா வித்தியாலயத்திலும் பதிவு செய்யப்பட வேண்டியிருந்தபோதிலும் இவர்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு வருகை தரவில்லை என கூறப்படுகின்றது.

இறுதிக் காலக்கட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிரணிபொது வேட்பாளர் மைத்திரபால சிரிசேனவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்தது. இதையடுத்து பஷீர் சேகு தாவூத் அமைச்சு பதவியை இராஜினாமா செய்தார்.

எனினும் கிழக்கு மாகாண அமைச்சர்கள் எவரும் தமது பதவியை இராஜினாமா செய்யவில்லை. அத்துடன் குறித்த அமைச்சர்கள் எவரும் தேர்தல் பிரசாரத்திற்கான எந்தவொரு பணியிலும் ஈடுப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post