Breaking
Sat. Dec 6th, 2025
-அஷ்ரப் ஏ சமத்  –
பொன்சேகாவின் “ஜம்பரை” மைத்ரிக்கு அணிவிப்பதாக சூளுரைத்த முஸ்லிம் தலைவர்கள் இன்று ஜனாதிபதி மைத்ரி காலில் விழ முயற்சி….
முன்னாள் ராணுவ தளபதி பொன்சேகா சிறையில் அணிந்த ஜம்பரை மைத்ரிக்கு தயாராக வைத்திருப்பதாக கூறி மேடைகளில் வீரவசனம் பேசிய கார்ட்போர்ட் அரசியல்முஸ்லிம்  தலைவர்கள் இன்று ஜனாதிபதி மைத்ரியின் காலடியில் விழ முயற்சி செய்துவருவதாக ஐக்கிய தேசிய கட்சி மேல் மாகாண சபை  உறுப்பினரும் மத்திய கொழும்பு அமைப்பாளருமான  பைரூஸ் ஹாஜியார் குற்றம் சுமத்தியுள்ளார்.
முஸ்லிம்களின் விடிவுக்காக நாம் அன்று எமது உயிரையும் துச்சமாக மதித்து களத்தில் இறங்கினோம் எமக்கு பக்கபலமாக மக்கள் களமிரங்கினார்கள் எமது முஸ்லிம் ஊடகங்களும் துணிச்சலாக களமிரங்கியிருந்தன. அன்று வெட்கம் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் சிவில் அமைப்பு பிரதானிகள் என சிலர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தனர். மைத்ரிபால சிறிசேன ஒரு இன துவேசி என கூக்குரலிட்டர்களால் சில மவுலானாக்களும் ,புல்லாக்களும்,ஹாஜியார்களும் மஹிந்த ராஜபக்ஷவின் எலும்பு துண்டுகளுக்காக சமூகத்தை காட்டிகொடுத்தர்கள்.
ஆனால் இன்று ஜனாதிபதி மைத்ரி பக்கம் தாவ தூது அனுப்புகிறார்கள் இதே மஹிந்த வென்றிருந்தால் எம்மையும் எமது சமூகத்தையும் மகிந்தவிடம் தோலுரித்து காட்டியிருப்பார்கள்.எம்மை அடித்து நொறுக்கியிருப்பர்கள். சமூக நலனுக்காக ஜனாதிபதி மைத்ரிக்கு அதரவாக  இயங்கிவந்த அரசியல் கட்சிகள் ,பொது அமைப்புகள் மற்றும் முஸ்லிம் ஊடகங்களை மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஊடாக முடக்கியிருப்பார்கள்.
மக்களை வைத்து பிழைப்பு நடத்தும் இவர்களை நாம் ஒருபோதும் எம்மோடு சேர்த்துக்கொள்ளமாட்டோம் அதே போல் வரும் காலங்களில் மக்களும் குறிப்பாக எமது ஊடகங்களும் இவர்களை புறக்ககனிக்கவேண்டும் என தாம் வேண்டுகோள் விடுப்பதாக ஐக்கிய தேசிய கட்சி மேல் மாகாண சபை  உறுப்பினரும் மத்திய கொழும்பு அமைப்பாளருமான  பைரூஸ் ஹாஜியார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Post