கடந்த அரசாங்கத்தின் சகல அபிவிருத்தித் திட்டங்களும் இடைநடுவில் கைவிடப்பட மாட்டாது!– ரவூப் ஹக்கீம்

கடந்த அரசாங்கத்தின் சகல அபிவிருத்தித் திட்டங்களும் இடைநடுவில் கைவிடப்பட மாட்டாது என அமைச்சர்  ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

அமைச்சுக்களின் கடமைகளை நேற்று பொறுப்பேற்றுக் கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கத்தினால் மக்களின் அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் கைவிடப்பட மாட்டாது.

எனினும் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்க சகல வழிகளிலும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அமைச்சின் மூலம் மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய சேவைகள் உரிய முறையில் வழங்கப்படும்.

கட்சித் தலைவர் என்ற ரீதியில் இந்த அரசாங்கத்தின் 100 நாள் வேலைத் திட்டத்தை முன்னெடுக்கும் பங்கு எனக்கும் உண்டு.

குறுகிய காலத்தில் சில பணிகளை மேற்கொள்ள அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியமாகின்றது என ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.