Breaking
Sat. Dec 6th, 2025

தங்க நகைகளை மோசடியாக விற்பனை செய்ய முயன்றதாக தன்னுடைய தாயார் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை திட்டவட்டமாக மறுத்துள்ள நாமல் ராஜபக்‌ஷ, அரசியல் ரீதியாக வேண்டுமானால் என் மீதோ என்னுடைய தந்தையையோ தாக்குங்கள். என்னுடைய தாயாரை, குடும்பத்தினரை விட்டுவிடுங்கள் எனத் தெரிவித்திருக்கின்றார்.

“அரசியல் பழிவாங்கல்தான் உங்களுடைய நோக்கம் என்றால், என்னுடைய தந்தையை அல்லது என்னைத் தாக்குங்கள். என்னுடைய தாயார் மீதோ சகோதரர் மீதோ பொய்யான குற்றச்சாட்டடுக்களை சுமத்த வேண்டாம்” எனவும் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தனவின் மனைவி, லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் முன்பாகச் செய்துள்ள முறைப்பாடு தொடர்பாக கருத்து வெளியிட்ட நாமல் ராஜபக்‌ஷ, “அந்தக் குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது. எமது குடும்பத்தினர் மீது சேற்றைவாரி இழைப்பதே இந்தக் குற்றச்சாட்டுக்களின் நோக்கம்” எனக் குற்றஞ்சாட்டினார்.

Related Post