Breaking
Fri. Dec 5th, 2025

நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் அனைத்து கணக்குகளையும், சோதனைக்குட்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

வெலே சுதா எனப்படும் போதைப்பொருள் வர்த்தகருடன் தொடர்பு வைத்திருந்ததாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை அடுத்து, அவரது கணக்குகளை சோதனைக்குட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

அத்துடன், துமிந்த சில்வா நாட்டை விட்டு வெளியேறுவதற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Post