Breaking
Sat. Dec 6th, 2025

இர்ஷாத் றஹ்மத்துல்லா

கிழக்கு மாகாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், கைத்தொழில்,வணிக மற்றும் வாணிப துறை அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு கல்முனை நற்பிட்டிமுனை மக்கள் பெரும் வரவேற்பு நிகழ்வொன்றினை நேற்று நடத்தினர்.

நுடை பெற்றுமுடிந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் கிழக்கு மாகாணத்துக்கு விஜயம் செய்துள்ள தேசிய தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் நற்பிட்டி முனை பிரதான வீதி ஊடாக விழா இடம் பெறும் இடத்துக்கு ஊர்வலமாக அழைத்து சென்றனர்.

கல்முனை மாநாகர சபை உறுப்பினர் எம்.முபீத்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்முனை இளைஞர் காங்கிரஸின் அமைப்பாளர் எம்.ஹலீம் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் இந்த மாபெரும் வரவேற்பினை ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த நிகழ்வில பிரதி அமைச்சர் அமீர் அலி,கிழக்கு மாகாண சபையின் பிரதி தவிசாளர்,முன்னாள் அமைச்சர் சுபைர்,கிழக்கு மாகாண சபை உறுப்பினரும்,கட்சியின் பிரதி தலைவருமான ஷிப்லி பாருக்,வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன்,கட்சியின் செயலாளர் நாயகம் ஹமீட் உட்பட பலரும் இதன் போது பிரசன்னமாகியிருந்தனர்.

Related Post