Breaking
Sat. Dec 6th, 2025

முன்னிலை சோஷலிஸ கட்சியினால், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, தேர்தல்கள் ஆணையாளர் கோராத நிலையில் இராணுவத்தினரை அழைத்தமைக்கு எதிராகவே இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆயுத படைகளுக்கு பொலிஸாரின் அதிகாரங்களை வழங்கியே இராணுவம் அழைக்கப்பட்டுள்ளதாக அந்த கட்சி தெரிவித்துள்ளது.

அன்றிருந்த அரசு 2011ஆம் ஆண்டு, அவரசகாலச்சட்ட ஒழுங்குவிதிகளை நீக்கியது. அவ்வாறு இருந்த நிலையில், மக்கள் பாதுகாப்பு கட்டளைச்சட்டத்தின் 12ஆம் பிரிவை பயன்படுத்தி முழு நாட்டையும் கவனிக்கும் வகையில் பொலிஸ் அதிகாரம், இராணுவம், கடற்படை மற்றும் விமான படையினருக்கு கையளிப்பதற்கு ஒவ்வொரு மாதம் கட்டளைச்சட்டத்தை தொடர்ச்சியாக அமுல்படுத்தியது.

எனினும், அவரசகாலச்சட்டத்தை நீக்கியதன் ஊடாக ஜனநாயகத்தை ஏற்படுத்துவதாக காண்பித்து, உண்மையான இராணுவ அச்சுறுத்தல் விடுப்பதானது பிரஜைகளின் நிர்வாகத்துக்கு அச்சுறுத்தல் விடுப்பதாக கடந்த அரசு செயற்பாடு அமைந்திருந்தது. இந்த மனுவில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பிரதான பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ளார்.

Related Post