Breaking
Sun. Dec 7th, 2025

ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரான பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் காலப் பகுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் ஒப்பந்நதம் மேற்கொள்ளப்பட்டாதாக போலியான ஆவணங்களை காண்பித்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட இவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இந்த நிலையில் கொழும்பு நீதவான் முன்னிலையில் இன்று இவர் ஆஜர்படுத்தப்பட்ட போது, இவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

Related Post