Breaking
Sun. Dec 7th, 2025

போதைப் பொருள் கடத்தலில் ஈடுப்பட்டதாக சந்தேகிக்கப்படும் “வெலே சுதா“ என்கிற சமன் குமாரவை தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைத்து பொலிஸார் விசாரணை நடத்துவதற்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

கொழும்பு உயர் நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை வெலே சுதா ஆஜர்படுத்தப்பட்டார். பொலிஸார் சமர்ப்பித்த சாட்சியங்களையும், அறிக்கைகளையும் ஆராய்ந்த நீதிமன்றம், அவரை மார்ச் மாதம் 23ஆம் திகதி வரை தடுப்புக் காவலில் வைத்து விசாரணை நடத்துவதற்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டது.

போதைப் பொருள் கடத்தலின் மூலம் 17 கோடி ரூபா பெருமதியான சொத்து வாங்கிய குற்றச்சாட்டின் பெயரிலேயே வெலே சுதா மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அண்மையில் பாகிஸ்தானில் வைத்து கைது செய்யப்பட்டிருந்த வெலே சுதா, இலங்கைக்கு கொண்டுவரப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.

Related Post