Breaking
Sun. Dec 7th, 2025

முகம்மட் பஹாத்

அமைச்சர் றிஷாத் பதியுதீனின் அமைச்சான கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சிற்குள் அத்துமீறி நுழைந்துகுந்தகம் விளைவித்தமை தொடர்பில் சர்ச்சைக்குரிய இனவாத அமைப்பான பொதுபல சேனா அமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் ஆறுபேருக்குகோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (26) பிடியாணை பிறப்பித்தது.

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சிற்குள் அத்துமீறி நுழைந்து குந்தகம் விளைவித்தமைதொடர்பில் பொதுபல சேனாஅமைப்பின் உறுப்பினர்களுக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யுமாறு கோட்டை நீதவான் கடந்த ஜனவரி 22ஆம் திகதி பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Related Post