Breaking
Sun. Dec 7th, 2025

அஸ்ரப் ஏ சமத்

கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள தொடர்பாக முறையான விசாரணை ஒன்றை அரசு நடந்த வேண்டும் என மேல் மாகாண சபை உறுப்பினர் மற்றும் மத்திய கொழும்பு ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளருமான பைரூஸ் ஹாஜியார் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களிடத்தில் கடிதம் ஒன்றின் மூலம் விஷேட வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

குறிப்பாக அளுத்கம பேருவளை சம்பவங்களின் போது முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள் தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றின் மூலம் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு அந்த சம்பங்களில் சம்பந்தப்பட்டகுற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரியுள்ள அவர் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்குவது தொடர்பாகவும் வரும் இரு தினக்களுக்குள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களை நேரடியாக சந்தித்து கோரிக்கையை முன்வைக்கவுள்ளார்.

தற்போது சில அரசியல்வாதிகள் அமைதியாக இருந்த கடும்போக்குவாதிகளுக்கு தீனி போடும் வகையில் அறிக்கைகளை விட்டு அவர்களை உசுப்பேற்றிவிட்டுள்ளனர் இதனை ஒரு பொருட்டாக கருதிய கடும்போக்குவாதிகள் முஸ்லிம்களுக்கு எதிராக கடுமையாக விமர்சனங்களை முன்வைக்க ஆரம்பித்துள்ளனர்.இது போன்ற கருத்துக்களை வெளியிடுபவர்கள் இரு தரப்பிலும் உள்ளனர் என சுட்டிக்காட்டியுள்ள அவர்…

கடந்த சில தினக்களுக்கு முன்னர் பிரதமர் இனவாதத்தை தூண்டும் விதத்தில் பத்திரிகைகளில் செய்தி வெளியிடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவித்திருந்தார்.

அதனை நாம் மனமார பாராட்டும் அதேவேளை அதனுடன் நிறுத்தி விடாமல் இனவாதத்தை தூண்டும் விதமாக கருத்து வெளியிடுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை பிரதமருக்கு அவர் நாளை மறுதினம் பிரதமரிடத்தில் நேரடியாக முன்வைக்கவுள்ளதாக அவரின் ஊடக பிரிவு அறிவித்துள்ளது.

சமூகத்தை காட்டி இனவாதத்தை தூண்டும் விதாமாக அரசியல்வாதிகள் மற்றும் மதகுருமார்கள் கருத்து வெளியிடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Post