Breaking
Sat. Dec 6th, 2025

“நான் தற்போது ஜோதிடத்தை நம்புவதில்லை” என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் ஊடகவியலாளர் ஒருவருடன் தங்காலை கார்ல்டன் வீட்டில் இடம்பெற்ற நேர்காணலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு பாகிஸ்தான் எவ்விதம் உதவியது என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த மஹிந்த ராஜபக்ஷ, “அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் எமது நண்பர்கள் அல்ல. பாகிஸ்தான் எமக்கு அதிகம் உதவியது. விசேடமாக முஷாரப. எனது நாட்டுக்கும் உங்கள் நாட்டும் என்ன நடந்தது, இந்தியாவின் ´ரோ´ இதன் பின்னணியில் உள்ளது. நான் பாகிஸ்தானுக்கு இரண்டு தடவைகள் சென்றுள்ளேன். டெக்சிலாவுக்கு சென்று அங்குள்ள புத்தமத பீடங்களை பார்த்துள்ளேன். ஆனால் இங்குள்ள மக்களுக்கு அது தெரியாது” என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மேலும் “கிழக்கில் உள்ள முஸ்லிம்களும் வடக்கு மக்களும் சர்வதேசத்தால் பிழையாக வழிநடத்தப்பட்டுள்ளனர்” என மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

-AD-

Related Post