Breaking
Tue. Dec 9th, 2025

கனடாவில் மக்களின் வரிப்பணத்தை அதிக அளவில் வீணடித்ததற்காக ஒன்றாரியோவின் லண்டன் நகரத்தின் முன்னாள் முதல்வருக்கு தேசிய Teddy Waste விருது வழங்கப்பட்டுள்ளது.

வரியிறுப்பாளர்களின் கனேடிய சம்மேளனம் வரிப்பணத்தை வீணடிப்போரை சுட்டிக் காட்டும் வகையில் வருடந்தோறும் இந்த‌ விருதுகளை அறிவிக்கிறது.

தற்போது முன்னாள் சமஷ்டி அமைச்சரும், ஒன்றாரியோவின் லண்டன் நகரத்தின் முன்னாள் முதல்வருமான ஜோ ஃபொன்ரானாவுக்கு (Joe Fontana) தேசிய Teddy Waste விருது வழங்கப்பட்டுள்ளது.

தமது மகனின் திருமணத்திற்கு ஏற்பட்ட செலவில் ஆயிரத்து எழுநூறு டொலரை, தமது செலவினமெனக் காட்டி நாடாளுமன்ற அலுவலகத்தில் இருந்து ஃபொன்ரானா பணம் பெற்றார்.

மேலும், குற்றவாளியென நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னரும், அவர் ஒரு லட்சத்து இருபத்து இரண்டாயிரம் டொலர் ஓய்வூதியத்தைப் பெறுவதாக கனேடிய வரியிறுப்பாளர்களின் சம்மேளத்தின் தேசிய பணிப்பாளர் சுட்டிக் காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post