Breaking
Tue. Dec 16th, 2025

இலங்கை ஊடகத்துறையில் பணியாற்றுகின்ற 29 வீதமான பெண்கள் பாலியல் தொல்லைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர் என்று சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளனத்தின் புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டீல்ரூக்சி ஹந்துன்நெத்தி என்ற ஊடகவியலாளர்கள் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் 45 பெண்களில் 13 பெண்கள் (28.8மூ) தாம் வேலைத்தளங்களில் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாக வேண்டியிருக்கிறது என்று தெரிவிக்கின்றனர்.

ஆனால் இவ்வாறான தொல்லைகள் குறித்து இதுவரை எதுவித முறைப்பாடுகளும் பதிவாகவில்லை என்றும், தமது எதிர்காலம் கருதி முறைப்பாடுகளை பதிவுசெய்ய பாதிக்கப்பட்டவர்கள் முன்வருவதில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை நிறுவன ரீதியாகச் செய்யப்படும் உள்ளக முறைப்பாடுகளை குறித்த நிறுவனங்கள் கருத்தில் கொள்ளாது நிராகரிக்கின்றன என்றும் கூறப்படுகிறது.

ஆங்கில நாளிதழ் ஒன்றில் பெண் ஊடகவியலாளர் ஒருவர் தனக்கு ஏற்படும் பாலியல் தொல்லை குறித்து நிறுவன பிரதானியிடம் கூறியபோதும் அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் டீல்ரூக்சி ஹந்துன் நெத்தியிடம் சாட்சியளித்துள்ளார் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Post