பிரித்தானியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினை சர்ச்சைக்குரிய சனல் – 4 தொலைக்காட்சியின் தயாரிப்பாளரான கெலும் மெக்ரோய் சந்திக்க முயற்சித்துள்ளார்.
இலங்கையில் இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றங்கள் அடங்கிய ‘நோ பயர் சோன்’ திரைப்படத்தின் சிங்கள மொழியாக்கத்தை ஜனாதிபதியிடம் கையளிப்பதற்காகவே அவரை சந்திக்க இவர் முயற்சித்துள்ளார்.
எனினும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதனை கணக்கிலெடுக்காமல் சிரித்துகொண்டே காரில் ஏறிவிட்டார். அதனையடுத்து வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவிடம் வழங்குவதற்கு முயன்றார்.
அமைச்சர் மங்கள சமரவீர – கெலும் மெக்ரேயிடம் ஏதோ கூறிவிட்டு காரில் ஏறிவிட்டார். இதனையடுத்து அங்கு நின்றுகொண்டிருந்த பாதுகாப்பு ஊழியர், கெலும் மெக்ரேயை அங்கிருந்து செல்லுமாறு பணிக்கவே அவரும் அங்கிருந்து சென்றுவிட்டார்.
சிங்கள மொழியாக்கம் செய்யப்பட்ட இந்த திரைப்படம், பிரித்தானியாவின் பாராளுமன்றத்தில் நேற்று திரையிடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

