அபூ பயாஸ்
மட்டக்களப்பு மாவட்ட,ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆஸ்பத்திரி வீதி,ஏறாவூர் -3A ஐ சேர்ந்த சம்மூன் குட்டி முஹம்மது ரஷீத் (வயது -29) என்பவர் சென்ற திங்கள் கிழமையிலிருந்து (09-03-2015) காணாமல் போயுள்ளார்.
ஏறாவுரிலிருந்து கொழும்புக்கு அரிசி ஏற்றிச் செல்லும் லொறியில் நடத்துனராக (கோளயா”) சென்ற இவர் கொழும்பிலுள்ள கடையில் திங்களன்று காலை அரிசி இறக்கிவிட்டு அருகிலுள்ள ஹோட்டலில் தேநீர் குடிக்க சென்ற இவர் திரும்பி வரவில்லை என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
நான்கு நாட்களாக தேடியும் இவரை கண்டுபிடிக்க முடியாததால் பொதுமக்களாகிய உங்களின் மூலமாவது இவரை கண்டுபிடிக்க உதவுமாறு உறவினர்கள் கவலையுடன் கேட்டுக் கொள்கின்றனர். இவர் திருமணம் முடிக்காதவர் என்பது குறிப்பிடத்தக்கது.
(தகவல் – ஏறாவூர் ,புன்னக்குடா வீதி,ஐஸ் வாடி மன்சூர் , 0776029991

