புத்தளம் ஆராச்சிக்கட்டுப் பகுதியில் தொழிற்சாலை வேண்டாம் – பிக்குகள் சத்தியாக்கிரகம்

ஆராச்சிக்கட்டுப் பகுதியில் தொழிற்சாலை நிர்மானிக்க வேண்டாம் என கோரி பௌத்த பிக்குகள் தொடர்ந்து ஒன்பதாவது நாளாக இன்றும் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புத்தளம் ஆராச்சிக்கட்டுப் பிரதேச சபைக்குட்பட்ட புத்தளம்-சிலாபம் பிரதான வீதியின் ஆனைவிழுந்தாவப் பகுதியில் நிர்மானிக்கப்படவுள்ள வீட்டுக் கூரைத் தகடு உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை தடுத்து நிறுத்துமாறுக் கோரி தொழிற்சாலைக்கு முன்பாக இன்று ஒன்பதாவது நாளாக சத்தியாகிரகப் போரட்டத்தில் பௌத்த பிக்குகள் உட்பட பொது மக்கள் ஈடுபட்டிருப்பட்டுள்ளனர்.

(vk)