முன்னாள் ஜனாதிபதியின் செயலக பிரதம அதிகாரி காமினி செனரத்திடம் நிதி மோசடி தொடர்பில் விசாரணை

பாரியளவில் இடம்பெற்ற  நிதி மோசடி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதியின் செயலக பிரதம அதிகாரி காமினி செனரத்திடம் தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

நிதி நிறுவனமொன்றில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி குறித்தே அவரிடம் விசாரணை நடத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.