Breaking
Tue. Dec 9th, 2025

2014 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7  ஆம் திகதிக்கு முன்னதாக வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.   2013 ஆம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கான பெறுபேறுகள் 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாத முதல் வாரத்தில் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இம்முறை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள், மழை வெள்ளத்தினால் பாதிப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் மதிப்பீட்டுப் பணிகள் இரண்டு வார காலம் தாமதிக்கப்பட்ட போதிலும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதிக்கு முன்னதாக பெறுபேறுகளை வெளியிட முடியுமெனவும் பரீட்சை ஆணையாளர் டபிள்யு.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

Related Post