Breaking
Tue. Dec 9th, 2025

அஸ்ரப் ஏ சமத்

இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்  தமிழ் ஊடகவியலாளர்களுக்கு 50 இலட்சம் பெறுமதியான ஊடக உபகரங்களை இலவசமாக பகிர்ந்தளித்தனர். இந் நிகழ்வு இன்று கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது.
பிரதம அதிதியாக மன்னார் ஆயர் இரா ஜேசப் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். தினகரன், வீரகேசரி, தினக்குரல் பத்திரிகையில் நிருபர்கள், பிரதேச ஊடகவியலாளர்களுக்கு  25 பேருக்கு லெப் டொப், மேலும் 10 புகைப்படக்கருவிகள், பெக்ஸ் மெசின்கள், வொயிஸ் ரேக்கோடர்கள் மற்றும் பேக்கள் இலவசமாக  பகிர்ந்தளிக்கப்பட்டன.
இதில் முஸ்லீம் ஊகடவியலாள்களான வீரகேசரி சிரேஸ்ட ஊடகவியலாளர்  சித்தீக் காரியப்பர். புகைப்பிடிப்பாளர் சலீம், வீரகேசரி ஊடகவியலாளர் மின்காஜ் ஆகியோறுக்கும் மடிக்கனனி வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், செல்வன் அடைக்கலநாதன், பேராசிரியர் ஜெயராஜ் மனோ கனேசன் ஆகியோறும் உரையாற்றினார்கள். சிரேஸ்ட ஊடகவியலாளர்கள் சின்னத்துறை சன்முகராஜ், பாலசிங்கம், இளையதம்பி, பாக்கிராச, கந்தசாமி அரசரட்னம், கருப்பையாப்பிள்ளை ,லோரண்ஸ் குஞ்சா ஆகியோறும் கௌரவிக்கப்பட்டனர்.

Related Post