Breaking
Tue. Dec 16th, 2025

அஸ்ரப் ஏ சமத்
வாழைச் சேனைக் கடதாசிஆலையில் கடமையாற்றும் ஊழியர்களது சம்பளம்கிடைப்பதற்காக நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதியமைச்சர் அமீர் அலி இன்று ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

வாழைச்சேனை கடதாசி ஊழியர்கள் தமது 5 மாத சம்பளம் மற்றும் கடந்த 3 வருடமே சலாபிநிதி ஆகியவற்றை சம்பந்தப்பட்ட அமைச்சர் மற்றும் நிதியமைச்சர் பிரதமர் கவண்த்தினை ஈக்கும் வகையில் ஓட்டமாவடி பாலத்திற்கு அருகில் சுழற்சி முறையில் உண்னாவிரதப் போராட்டத்தில் இருந்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இங்கு பிரதியமைச்சர் அமிர் அலிமேலும் கருத்து தெரிவிக்கையில் –
கடந்த மாதம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகைதந்தகைத் தொழில் வர்த்தகஅமைச்சர் றிசாத் பதியுத்தீன் நேரடியாக வாழைச்சேனை கடதாசிக் கூட்டுத்தாபணத்திற்கு விஜயம் செய்த அங்கு பணியாற்றும்  ஊழியர்களதுசம்பளம் மற்றும் ஆலையின் பிரச்சினைகளை கேட்டறிந்தார்.

இவ்விடயமாக அமைச்சர் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சின் அதிகாரிகளின் கவணத்திற்கும் கொண்டு வந்துள்ளார்.

அடுத்த ஒரு வாரத்திற்குள் இவ் ஊழியர்களது சம்பளம் வழங்கப்படும். என பிரதியமைச்சர் அமீர் அலி தெரிவித்தார்.

Related Post