Breaking
Wed. Dec 10th, 2025

கட்டார்  மன்னர் தமீம் பின் ஹமத் ஆலு தானி இம்மாதம் 23ஆம் 25ஆம் திகதிகளில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கபட்டு இருந்த அதேவேளை நாளை (24) இலங்கையை வந்தடைவார் என உத்தியோகபூர்வமாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் நாளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களை சந்தித்து கலந்துரையாடுவதுடன் நான்கு மணித்தியாலம் இலங்கையில் தங்கி இருப்பார் எனவும் தெரிய வருகிறது.

மேலும் இவரின் வருகைக்காக கொழும்பில் போக்குவரத்து முறைகளில் மாற்றங்களும் மேட்கொள்லப்பட உள்ளது.

குறித்த விஜயத்தின் போது, இளைஞர், விளையாட்டு, கலாச்சாரம், சுகாதாரம், தகவல் தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றம் தொடர்ப்பான பல்வேறு உடன்படிக்கைகளிலும் அமீர் கைச்சாத்திடவுள்ளதாக தெரிய வருகிறது.

Related Post