Breaking
Mon. Dec 15th, 2025

எட்டு வயதுடைய சிறுவனை 50 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்ததாக கூறப்படும் சிறுவனின் சிறிய தந்தை உட்பட மூன்றுபேரை கட்டுகஸ் தோட்டை பொலிஸார் நேற்று முன்தினம் இரவு சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

கட்டுகஸ்தோட்டை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே, அம்ப தென்னை கஹவத்த பிரதேசத்தைச் சேர்ந்த இம்மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறுவனின் தாயின் இரண்டாவது கணவரும் அவருடைய சகோதரர் மற்றும் சகோதரியுமே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விற்பனை செய்ததாக கூறப்படும் சிறுவன், நான்கு பிள்ளைகள் அடங்கிய குடும்பத்தின் மூன்றாவது பிள்ளை என்றும் அவருடைய தந்தை அங்க வீனமுற்றுள்ளதால் தாய் அவரை பிரிந்து வேறு ஒருவருடன் வாழ்ந்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சிறுவனை விற்பனை செய்வதற்கு, சிறுவனின் தாய் உடந்தையாக இருந்துள்ளாரா என்பது தொடர்பான விசாரணையை மேற்கொண்டு வருகின்றோம் என்று தெரிவித்த பொலிஸார், கைது செய்த சந்தேக நபர்களை கண்டி நீதவான் முன்னிலையில் முற்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

Related Post