Breaking
Fri. Dec 5th, 2025

இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் அளித்த வாக்குறுதிக்கு அமைய சீமெந்துக்கான நிர்ணய விலை உள்ளடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி எந்தவொரு இலட்சினையின் கீழும் விற்பனை செய்யப்படும் 50 கிலோ சீமெந்து ஒரு மூடையின் விலை 870 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிர்ணய விலைக்கு சீமெந்து விற்பனை செய்யாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Post