Breaking
Sat. Dec 6th, 2025

பிரதமர் ரணில் விக்ரமசிங்க அம்பாறை மாவட்ட ஐக்கியதேசிய கட்சியின் முக்கியஸ்தர்களுடனான சந்திப்பொன்றினை மேற்கொள்வதற்காக எதிர்வரும் ஞாயற்றுக்கிழமை அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுய்யதாக சம்மாந்துறைத் தொகுதிக்கான ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர் எம்.ஏ. ஹசன் அலி தெரிவித்தார்.

இதன் போது பிரதேசங்களினதும், தொகுதிகளினதும், மாவட்ட ரீதியான ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி முக்கியஸ்தர்களுடன் பிரதமர் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இச்சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு அம்பாறை தயாகமகே மண்டபத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Post