Breaking
Sat. Dec 6th, 2025

ஜப்பானில் பாராளுமன்ற கூட்டம் நடந்தது. அப்போது அன்டோனியோ இனோகி என்ற எம்.பி. குறுக்கிட்டு நமது நாட்டின் வான் எல்லையில் வேற்று கிரக வாசிகள் நடமாட்டம் இருப்பதாக கூறப்படுவது அச்சமாக உள்ளது.

பச்சை நிற வேற்று கிரக வாசிகள் ஒருவிதமான வாகனத்தில் பறந்து வந்தது உண்மையா? என கேள்வி எழுப்பினார். அதை தொடர்ந்து எம்.பி.க்கள் பலரும் அது குறித்து கேட்டனர்.

அதற்கு ராணுவ மந்திரி ஜெனரல் நகட்டானி பதில் அளித்தார். ஏதோ ஒருவிதமான ஒரு பொருள் நமது நாட்டு வான் எல்லையில் பறந்ததை போர் விமானங்கள் கண்டு பிடித்துள்ளன.

ஆனால் அதில் வேற்று கிரகவாசிகள் இருந்தனரா? என தெளிவாக கூறவில்லை. ஒருவேளை அவை பறவையாகவோ, வேறு பொருளாகவோ இருக்கலாம்.

எனவே நமது விமான பாதுகாப்பு படை அது குறித்து தீவிரமாக கண்காணித்து வருகிறது. நமது வான்வெளியில் வேற்று கிரகவாசிகளோ அவர்களின் விண்கலங்களோ வர அனுமதிக்க மாட்டோம் என உறுதி அளித்தார்.

Related Post