Breaking
Sat. Dec 6th, 2025

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் டுபாய் வங்கியொன்றிடம் அடகு வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் தலைவர் டுபாய் மஸ்ரேக் வங்கியில் 23079 மில்லியன் ரூபா பிணைக் கடன் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த 2014ம் ஆண்டு இவ்வாறு கடன் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

திறைசேரி பிணையின் அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்படும் கடனானது அடகுக் கடனுக்கு நிகரானது என தெரிவிக்கப்படுகிறது.

டுபாய் வங்கியிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட கடன் அடகுக் கடனுக்கு நிகரானது என பொருளியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
2014ம் ஆண்டு நிறைவில் செலுத்தப்படாத கடன் தொகை 30712 மில்லியன் ரூபா எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆண்டில் செயற்பாட்டு நட்டம் 8400 மில்லியன் ரூபாவாகும்.

முன்னாள் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிசாந்த விக்ரமசிங்கää முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாரியார் சிராந்தி ராஜபக்சவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post