இலங்கையின் உற்பத்தித் துறையை அபிவிருத்தி செய்வதில் சீனா ஆர்வம்!

முனவ்வர் காதர்

வரலாற்று ரீதியாக சினோ-லங்கா (Sino-Lanka) உறவு தொடர்ச்சியாகப் நீடித்து வருகின்றது. இலங்கையில் விஷேட பொருளாதார வலய முறைமையை அறிமுகப்படுத்தி அதனுள் இலங்கையின் கரையோர நகரங்களை உள்வாங்கி அவற்றின் மீது விஷேட கவனம் செலுத்தி நாட்டின் உற்பத்தித் துறையை அபிவிருத்தி செய்வதில் சீனா ஆர்வம் கொண்டுள்ளதோடு, இரு நாடுகளுக்குமிடயிலான நேரடிப் பங்குடைமையை நீடிக்கவும், விருப்பம் கொண்டுள்ளது. இதனடிப்படைகளில் இலங்கைக்கு கடன் வசதிகள் வழங்க சீனா விருப்பம் கொண்டுள்ளமையை வெளிப்படையாக தெரிவித்துள்ளது.

அண்மையில்;; ஏற்றுமதி அபிவிருத்தி சபையில் இலங்கைக்கான இலங்கைக்கான சீன குடியரசின் புதிய சீனா தூதுவர் யே சியான்லைங் (Yi Xianliang) கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனை சந்தித்தபோதே சீனா தூதுவர் இதனை கூறினார்.

அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்: இலங்கையின் கைத்தொழில் துறை அபிவிருத்திக்கு கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி மாத்திரம் போதுமானதல்ல. எமது பங்களிப்புடன் இலங்கையில் சில கைத்தொழில் வலயங்களை உருவாக்க சில திட்டங்களை நாங்கள் முன்மொழிந்துள்ளோம். இச்சந்தர்ப்பத்தில், அம்பாந்தோட்டை மற்றும் இலங்கையின் வடபகுதிகளில் தற்போது சிறப்பான உட்கட்டமைப்பு விருத்திகள் காணப்படுகின்றன. எனவே உங்களுக்கு கடன் வசதிகளை வழங்கத் தீர்மானித்துள்ளோம்

நான் இலங்கையில் தூதுவராக நியமிக்கப்பட முன்னர் 8 வருடங்கள் ஐரோப்பாவில் இருந்த போது, சுமார் 50 நாடுகளுக்கு விஜயம் செய்திருக்கிறேன். ஆனால், இத்தகைய ஒரு அழகான, நட்புறவான இந்த இலங்கை நாட்டுக்கு சீனாவின் புதிய தூதுவராகப் பதவியேற்றதையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த நாட்டிற்கு நான் புதியவனாகையால், நான் இவ்விரு நாடுகளுக்குமிடையில் எவ்வாறு பொருளாதார, வர்த்தகக் கூட்டுறவை வளர்ப்பது என்பதை உங்களிடமிருந்து கற்றுக்கொள்ள விரும்புகிறேன். மேலும், இப்போதிருப்பது புதிய அரசாங்கம். எனவே, உங்களுக்கு என்ன விதமான தேவைகள் உள்ளன? நாங்கள் என்ன செய்ய வேண்டும்? ஏன்பதனை நீங்கள்தான் எங்களிடம் கூறவேண்டும்.

நான் உங்களிடமிருந்து விடயங்களைக் கேட்கவும் கற்றுக் கொள்ளவும் விரும்புகிறேன். 50 வருடங்களுக்கும் மேற்பட்ட பழைமை வாய்ந்த எங்களுடைய உறவுக் காலத்தில் இவ்விரு நாடுகளுக்குமிடையில் எந்தவிதமான முறண்பாடுகளோ, பிரச்சினைகளோ ஏற்பட்டதில்லை. எங்களுடைய இந்த இருதரப்பு உடன்படிக்கையானது, ஏனைய அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு சீனாவுடன்எ பங்குடைமை ஒப்பந்தத்துக்கான ஒரு முன்மாதிரியாகும். கைத்தொழில் அபிவிருத்தியானது, எமது பொருளாதார ரீதியான உறவுக்கு ஒரு சிறந்த அடித்தளமாக உள்ளது. சீன நிறுவனங்கள் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து வர்த்தகத்திலீடுபடுவதனை நான் துரிதப்படுத்துவேன். இத்தகைய இலங்கையுடனான கூட்டுறவு வர்த்தக ஊக்குவிப்பு கொழும்பிலுள்ள சீனத் தூதரகத்தின் முக்கிய பணிகளுள் ஒன்றாகும். சீனாவுக்கு இருக்கின்ற அனுபவத்தின் அடிப்படையில் நான் கூறுவது, நீங்கள் உங்கள் கரையோர நகரங்களை அபிவிருத்தி செய்யவேண்டும் எனவும் கூறியதோடு மேலும் அவர் தெரிவிக்கையில்: நாங்கள் 30க்கும் மேற்பட்ட கரையோர நகரங்களை அபிவிருத்தி செய்துள்ளோம். அது எமது வர்த்தகத்திலும் பொருளாதாரத்திலும் பெரும்பங்கு வகிக்கின்றது. இலங்கை-சீன கைத்தொழிற் கூட்டுறவை அபிவிருத்தி செய்யும் விதமாக நாங்கள் இங்கு சீனாவின் நேரடிப் பங்களிப்புடன் சில கைத்தொழில் வலயங்களை உருவாக்க விரும்புகிறோம். இலங்கை விவசாயத்தில் மாத்திரம் தங்கியிருப்பதானது, கைத்தொழில் ரீதியான மிகப்பெரிய அபிவிருத்தியையும் அதன் மூலமான பலாபலன்களையும் அடையமுடியாத நிலைக்குள்ளாகும். .

எனவே, எமது எதிர்கால வர்த்தக ரீதியான அபிவிருத்தியை கைத்தொழில் வலயங்களைத் தாபிப்பதினூடாக மேற்கொள்ளமுடியும். என நான் நம்புகிறேன. எனினும் இலங்கையின் நம்பகமான அபிவிருத்தி பங்காளராக சீனா தொடர்ந்தும் காணப்படும். வடக்கு கிழக்கு உட்பட நாhட்டில் முக்கிய பிறதேசங்களில் தொழில்துறை வளையங்கள் கைத்தொழில் பேட்டைகளை அமைக்க நாம் இலங்கைக்கு பூரண ஒத்தழைப்பினை வழங்குவோம் வழங்குவோம.;இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு சீனா தன்னாலான உதவிகளைத் தொடர்ந்தும் வழங்கிவரும். கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் துறைமுக நகரம் உட்பட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களில் சீனா முதலீடு செய்துள்ளது. எனக்கூறினார்.

2005 ஆம் ஆண்டில் இலங்கை – சீனாவுக்கான மொத்த வர்த்தகம் 658.94 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இது 2014ல் 3.58 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்திருந்தது. 2014 ஆம் ஆண்டில் இலங்கையில் சீனப்பொருட்களின் இறக்குமதி 3.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இங்கு கருத்து தெரிவிக்கையில்: எமது நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் சார்பில் எமது வர்த்தகத்திலும் அபிவிருத்திக் கொள்கைகளிலும் சீன அரசாங்கம் எமக்கு வழங்கியுள்ள இத்தகைய சலுகைகளையும், நட்பு ரீதியான பங்குடைமை வர்த்தகத்தையும் நான் மிகவும் மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன.;இப்பிணைப்பை எதிர்காலத்திலும் தொடர நாம் ஆர்வம் கொண்டுள்ளோம்.

இலங்கையின் வர்த்தகம் சீனாவுடனான பிணைப்பை மேலும் ; இறுக்கமாக்கும் வண்ணமாகவே தொடரும். சீனாவுக்கான எமது ஏற்றுமதி மாத்திரம் எமது இருதரப்பு வர்த்தகத்தைக் வெளிக்காட்ட போதுமானதல்ல. 2014ம் ஆண்டில் சீனாவுக்கான எமது ஏற்றுமதி 21மூ ஆகும்;. அது பெரும்பாலும் விவசாய ஏற்றுமதிகள் என அறிக்கைகள் காட்டுகின்றன. இது சீனாவுக்கான எமது கைத்தொழில் ரீதியான ஏற்றுமதிகளை நியாயமற்றவகையில் அடையாளம் காட்டுவதாயுள்ளது.