நாகூர் ஈ.எம். ஹனிபா காலமானார்

தென்னிந்தியாவைச் சேர்ந்த நாகூர் ஈ.எம். ஹனிபா உடல்நலக் குறைவு காரனமாக சென்னையில் நேற்று  (08) காலமானார்.

மரணிக்கும்போது அவருக்கு வயது 90.

இஸ்லாமிய கீதம் என்ற பெயரில் பாடல்கள் பாடியதன் மூலம் புகழ் பெற்ற நாகூர் ஹனிபா, தமிழக சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராகவும் மக்கள் பணியாற்றி உள்ளார்.

இன்று சென்னை கோட்டூர் புரத்தில் உள்ள இல்லத்தில் உடல்நலக் குறைவு காரணமாக நாகூர் ஹனிபாவின் உயிர் பிரிந்தது.