Breaking
Mon. Dec 15th, 2025

 இலங்கைக்கு வருகை தந்துள்ள  பூட்டான் பிரதமர் ஷெரிங் டொப்கே   இன்று வௌ்ளிக்கிழமை ஜனாதிபதி   மைததிரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின்  பேரில் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள பூட்டான் பிரதமர் நேற்றுக்காலை இலங்கை வந்தடைந்தார்.

காலை 10 மணியளவில்  கட்டுநாயக்க விமான  நிலையத்தை வந்தடைந்த   பூட்டான் பிரதமரை  வெளிவிவகார அமைச்சர்  மங்கள  சமரவீர வரவேற்றார்.

இன்றைய தினம்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன   பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும்   வெளிவிவகார அமைச்சர்   மங்கள சமரவீர ஆகியோரை  பூட்டான் பிரதமர் இன்று  சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

ஜனா திபதி  மைத்திரிபால சிறிசேனவுக்கும்   பூட்டான் பிரதமருக்கும் இடையிலான இருதரப்பு சந்திப்பின்போது   இரண்டு நாடுகளுக்கு இடையிலான உறவை   பலப்படுத்துவது குறித்து   ஆராயப்படவுள்ளதுடன் இருதரப்பு  உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்படவுள்ளன.

Related Post