இரண்டு கோடி ரூபா தங்க நகைகளை பனியனினுள் மறைத்து கடத்த எடுத்த முயற்சி முறியடிப்பு

எம்.ஐ.அப்துல் நஸார்

இரண்டு கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகளை தமது பனியனினுள் வைத்து மறைத்து இந்தியாவின் சென்னை நகருக்கு கொண்டு செல்வதற்கு வந்த இந்தியர்கள் இருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக சுங்கப் பிரிவின் ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார்.

கைப்பற்றப்பட்ட தங்க நகைகளின் நிறை 4.2 கிலோகிராமாகும்.

சந்தேக நபர்கள் ஜெட் விமான சேவைக்குச் சொந்தமான எஸ்.ஜீ.004 இலக்க விமானத்தில் இந்தியாவின் சென்னை நகருக்கு செல்வதற்கு வந்திருந்த நிலையில் விமான நிலைய பாதுகாப்புப் பிரிவினரால் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு சுங்கப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.