Breaking
Fri. Dec 5th, 2025

குவைத்தில் வேலை பார்க்கும் நேபாளத்தைச் சேர்ந்த ஒருவர் தனது நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை பற்றி கிண்டல் செய்த இந்தியரை கொலை செய்துள்ளார். நேபாளத்தைச் சேர்ந்த ஒருவர் குவைத்தில் வேலை செய்து வருகிறார். அவர் தங்கியிருக்கும் அறையில் இந்தியர் ஒருவரும் தங்கியிருந்தார். இந்நிலையில் அந்த இந்தியர் கடந்த சனிக்கிழமை நேபாளத்தில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கம் பற்றி கிண்டல் செய்துள்ளார். இதனால் அந்த நேபாள நபருக்கு கடும் கோபம் ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கானோர் பலியான நிலநடுக்கத்தை பற்றி கிண்டல் செய்த இந்தியரை அவர் கொலை செய்ய முடிவு செய்தார். இதையடுத்து அந்த இந்தியர் தூங்கும் வரை காத்திருந்தார். இந்தியர் தூங்கிய பிறகு நேபாள நபர் அவரை கத்தியால் பல முறை குத்திக் கொலை செய்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். தன் நாட்டு மக்களின் உயிரை குடித்த நிலநடுக்கம் பற்றி கிண்டல் செய்ததால் தான் இந்தியரை கொலை செய்ததாக அவர் விசாரணையில் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தால் அவர் வசித்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Post