Breaking
Sat. Dec 6th, 2025

புடாபெஸ்ட் சைபர் குற்றம் தொடர்பான பிரகடனத்தில் அங்கத்துவம் பெறும் முதலாவது தெற்காசிய வலய நாடு என்ற பெயரை இலங்கை பெற்றுள்ளது.

இதற்கான தகுதியை இலங்கை பெற்றுள்ளதாகவும் சட்ட ஆவணத்தை ஐரோப்பிய கவுன்ஸிலுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் இலங்கை தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப (ICTA) சட்டப் பணிப்பாளர் ஜயந்த பெனாண்டோ தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய கவுன்ஸில் செயலாளர் நாயகம் இந்த உறுப்புரிமையை பெற்றுக் கொள்ளுமாறு அழைப்பு விடுத்ததற்கு அமைய குறுகிய காலத்தில் சட்ட ஆவணம் தயாரித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் இது இலங்கைக்கு கிடைத்த வெற்றி என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related Post