Breaking
Fri. Dec 5th, 2025

கடந்த வெள்ளி ஜும்மா நாளன்று தமாமில் உள்ள ஒரு மஸ்ஜிதில் தற்கொலைப் படை தாக்குதல் நடந்தது. இதில் அப்பாவி மக்கள் பலர் படுகாயமடைந்தனர்.

நாட்டையே உழுக்கிய இந்த கோர சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது குறித்த செய்திகள் வாட்ஸ் ஆப், பேஸ்புக் போன்ற சமுக வலைதளங்களில் புகைப்படங்களுடனும், வீடியோகளுடனும் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றது. இந்த செய்திகளை அங்கு பணிபுரியும் நம்மவர்களும் அதிகம் பகிர்ந்திருந்தனர்.

சவூதியில் அங்குள்ளவர்கள் சமுக வலைதளங்களில் என்னென்ன செய்கிறார்கள் என்பது தீவிரமாக கண்கானிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த குண்டு வெடிப்பு செய்திகள் போன்றவற்றை சமுக வலைதளங்களில் பகிர்பவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு சவூதியை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என்ற தகவல் சவூதியில் பணிபுரியும் அதிரையை சேர்ந்த ஒரு நபர் நமது அதிரை பிறை நிர்வாகிக்கு தொடர்புகொண்டு தெரிவித்தார். எனவே அனைவரும் சற்று எச்சரிக்கையாக சமுக வலைதளங்களை உபயோகிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Related Post