Breaking
Fri. Dec 5th, 2025

கடந்த புதன் அன்று இஸ்லாமும் ஐரோப்பாவும் என்ற தலைப்பில் புரோக்ஸலில் ஒரு கருத்தரங்கம் நடை பெற்றது. அந்த கருத்தரங்கில் ஐரோப்பாவின் பல முக்கிய அரசியல்தலைவர்கள், பாரளுமன்ற உறுப்பினர்கள், ஐரோப்பாவிலுள்ள பல இஸ்லாமிய அமைப்புகளின், தலைவர்கள் மற்றும்  இமாம்கள் உட்பட பெரும் திராளானவர்கள் கலந்து கொண்டனர்.

அந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய ஐரோப்பிய கூட்டமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவரான மோர்கிரீனி அவர்களின் பேச்சு அனைவரையும் கவரும் விதத்தில் அமைந்தது.

அவர் தமது உரையில்

“தற்போதைய சூழலில் ஐரோப்பாவின் மிக முக்கிய அங்கமாக இஸ்லாம் மாறிவிட்டது. எதிர்காலத்தில் இதைவிடவும் வலுவான முறையில் இஸ்லாம் தனது ஆதிக்கத்தை ஐரோப்பாவில் செலுத்தும். இதை நாம் சொல்லுவதர்கு அஞ்ச வேண்டிய தேவை இல்லை. சிலர்கள் இது போன்ற உண்மைகளை காது கொடுத்து கேட்க விரும்புவதில்லை.

“அவர்கள் விரும்பினாலும் விரும்பவில்லை என்றாலும் உண்மையை தொடர்ந்து மறைத்து கொண்டிருக்க முடியாது. ஐரோப்பியர்களின் சமூக அமைப்பில் இஸ்லாம் தனக்கு உரிய இடத்தை இயல்பான முறையில் தக்கவைத்து வருகிறது. இதற்கு நாம் ஆதரங்களை தேடி அலைய தேவை இல்லை. ஐரோப்பியர்களின் அன்றாட வாழ்வில் இஸ்லாம் உருவாக்கி வரும் மாற்றங்களே இதற்கு போதிய சான்றாகும்.

“அதனால்தான், சொல்கிறேன் இனி வரும் காலங்களில் ஐரோப்பாவில் உருவாகபோகும் இஸ்லாமிய எழுட்சியை யாராலும் தடுத்து விடமுடியாது. இஸ்லாம் தான் ஐரோப்பா ஐரோப்பாவே இஸ்லாம்”. – இவ்வாறு அவரின் உரை அமைந்திருந்தது.

Related Post