அதிபர் பதவி ஓய்வுக்கு பின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பணிபுரிய ஒபாமா திட்டம்

தற்போது அமெரிக்க அதிபராக பாரக் ஒபாமா பதவி வகித்து வருகிறார். அவரது பதவிக்காலம் வருகிற 2017–ம் ஆண்டு முடிவடைகிறது. அதன் பின்னர் எதிர்காலத்தில் அவர் மேற்கொள்ளும் பணி குறித்து தற்போது பல யூகங்கள் எழ தொடங்கி விட்டன.

இந்த நிலையில் அவர் அதிபர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு கொலம்பியா பல்கலைக் கழகத்தில் பணிபுரிய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

கொலம்பியா பல்கலைக் கழக தலைவர் லீ பொலிக் கர் ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது அதை உறுதிப்படுத்தினார். இது குறித்து அவர் கூறும்போது, ‘அதிபர் பதவியில் இருந்து ஓய்வு பெறும் ஒபாமாவை வரவேற்க கொலம்பியா பல்கலைக் கழகம் தயாராக காத்திருக்கிறது’ என சூசகமாக தெரிவித்தார்.

அங்கு அவர் ஆற்ற இருக்கும் பணி குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.