கணவன் மனைவிக்கு மரண தண்டனை

ஹெரோயின் வர்த்தகத்தில் ஈடுபட்ட கணவன் மற்றும் மனைவி ஆகியோருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

பொரளைப் பகுதியைச் சேர்ந்த குறித்த கணவனும் மனைவியும் ஹெரோயின் வர்த்தகத்தில் ஈடுபட்ட நிலையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.