Breaking
Fri. Dec 5th, 2025

அங்கொட மனநல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் ஒருவர் மர்மான முறையில் காணாமல் போயுள்ளதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

வைத்தியசாலையின் பணியாளர்களின் துன்புறுத்தல்களை பொறுத்துகொள்ள முடியாமல் தனது மகன் வைத்தியசாலையில் இருந்து வெளியேறி காணாமல் போயுள்ளதாக பெற்றோர் சந்தேக்கின்றனர்.

ஹிக்கடுவை – களுபே பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய லக்ஷித பன்துல விக்ரமசிங்க என்ற இளைஞரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

குறித்த இளைஞன் மனநிலை பாதிக்கப்பட்டமையால் கடந்த 13 ஆம் திகதி அங்கொட மனநல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவந்த அவர் வைத்தியசாலையின் பணியாளர்கள் தனக்கு அடிக்கடி தொந்தரவு கொடுத்ததாக பெற்றோரிடத்தில் கூறியுள்ளார்.

By

Related Post